மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள்

75 0

மக்களின் பேச்சுசுதந்திரம் கருத்துசுதந்திரம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் அரசின் முயற்சிகளை கூட்டாக முறியடிப்போம் என  ஊடக சிவில் சமூக தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமூக அரசியல் அமைப்பில் ஆழமான மாற்றங்களை எதிர்பார்க்கும் குடி மக்கள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான பொதுமக்களின் கருத்துரிமையை கட்டுப்படுத்தும் ஒருங்கமைப்பதற்கான உரிமை சிவில் செயற்பாடுகளிற்கானஉரிமைகளை கட்டுப்படுத்தும்   அடக்குமுறை சட்டங்களை கொண்டுவந்து நாட்டை சர்வாதிகாரத்திற்குள் கொண்டு செல்லும் முயற்சிகள் குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அடுத்தவாரம் அரசாங்கம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஏனைய ஒடுக்குமுறை சட்டங்களை   நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எண்ணியுள்ளது அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் எதிர்வரும் தேர்தல்களை எப்பாடுபட்டாவது வெல்வதற்கான குறுகிய நடவடிக்கையாக மக்களின் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதை வெளிப்படுத்தியுள்ளன.

இலங்கையின் இறைமைக்கு உரித்துடையவர்களான பொதுமக்கள் சிவில் செயற்பாட்டாளர்கள் தொழிற்சங்க வாதிகள் என்ற அடிப்படையில் ஜனாதிபதி பொதுமக்கள் ஆணைமூலம் தெரிவு செய்யப்படவில்லை என உறுதியாக நம்புகின்றோம்,மேலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு ஒடுக்குமுறை சட்டங்களை நிறைவேற்றுவதற்கான புதிய சட்டங்களை திணிப்பதற்கான ஆணையில்லை.

பொதுமக்களின் மீது தாங்கிக்கொள்ளமுடியாத அழுத்தங்கள் திணிக்கப்பட்டதால் அமைப்பு முறை மாற்றத்தை கோரியும் ஊழல் அற்ற மக்களிற்கு சினேகமான ஜனநாயக அரசாங்கத்தை கோரியும் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் பின்னர் இடம்பெறும் தேர்தல்கள் என்பதால்  எதிர்வரும் தேர்தல்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியமானவை.

தணிக்கையற்ற துல்லியமான பக்கச்சார்பற்ற தகவல்களை அடிப்படையாக வைத்து மக்கள் விவாதிப்பதற்கான கருத்துபரிமாறுவதற்கான தளத்தை கொண்ட சுதந்திரமான நியாயமான தேர்தலாக எதிர்வரும் தேர்தல் அமைவதை உறுதிசெய்யவேண்டும்.

தங்கள் கொள்கைகளை எண்ணங்களை மக்களிற்கு தெரிவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உறுதிப்படுத்தவேண்டும்.

குடிமக்களை மௌனமாக்கும் அச்சத்திற்கு உட்படுத்தும் எந்த சட்டங்களும் மக்களிற்கு சினேகபூர்வமான சூழல் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துபவை.

நீண்டகாலமாக சில அரசியல்வாதிகளாலும் ஊழல் அதிகாரிகளாலும் அழிவை நோக்கி தள்ளப்பட்ட நாட்டிற்கு சட்டத்தின் மேல் அமர்ந்திருக்கும் சர்வாதிகாரிகள் அவசியமில்லை.