ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் கலாசார மற்றும் மத உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், பரிமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், இரு நாட்டு பாராளுமன்ற விவகாரங்களை ஆய்வு செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

