- Home
- முக்கிய செய்திகள்
- நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு !
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025 -
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களால் பெப்ரவரி 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பினர் பிரதிநிதிகளுக்கிடையில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.கடந்த 9 ஆம் திகதி முதல் 5 நாட்களாக பல்வேறு கட்டங்களின் கீழ் சுகாதார தொழிற்சங்கத்தினரால் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் நிதி அமைச்சுகளுடன் கலந்துரையாடிய போதிலும், இதுவரை சாதகமான பதில் எதுவும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.எனவே, தமது பிரச்சினைக்கான தீர்வுக்காக அரசாங்கத்திற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தீர்வு வழங்கப்படாவிடின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.