வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்களிடம் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது

152 0

வெளிநாடுகளில் வேலை செய்துவிட்டு நாடு திரும்பிய பெண்களின் வீடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரியாக பாவனை செய்து பண மோசடியில் ஈடுபட்டதாக  கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கண்டி – ஹதரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நாடு திரும்பிய பெண்களிடம் அவர்களது காப்பீடு பணம் காலாவதியாகியுள்ளதாகவும் அவ்வாறு காலாவதியான பணத்தை மீள பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறி அவர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி – ஹதரலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.