செங்கடல் ஊடாக பயணிக்கும் சீன ரஸ்ய கப்பல்களிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது – ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

176 0

செங்கடல் ஊடாக சீன ரஸ்ய கப்பல்கள் பாதுகாப்பாக பயணிக்கலாம் அந்த நாட்டு கப்பல்களை தாக்கப்போவதில்லை என ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக சரக்குகப்பல்களை தாக்கிவரும் நிலையிலேயே சீன ரஸ்ய கப்பல்கள் தாக்கப்படாது என்ற உத்தரவாதம் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் உட்;பட சில நாடுகளுடன் தொடர்புபட்ட கப்பல்களை தவிர ஏனைய நாடுகளின் கப்பல்களிற்கு ஆபத்தில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா சீனா உட்பட ஏனைய நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் பயணிப்பதால் ஆபத்து ஏதுவும் ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.