புதுக்குடியிருப்பு – மல்லிகைத்தீவு பகுதியில் பற்றைக்காடு ஒன்றிற்குள் இருந்து துப்பாக்கி ரவைகள் 37 மீட்கப்பட்டுள்ளன.
இவை 50 மில்லிமீற்றர் கனரக துப்பாக்கி ரவைகள் என தெரியவந்துள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் புதிய ரவைகளாக காணப்படுகின்றன.
மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை இன்று(19) நீதிமன்றில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.

