களுத்துறை பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகளை களுத்துறை புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாக களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியதாவது:
அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான பாடசாலைகளும் அடங்கும். மாணவர்கள் போதைப் பொருள் பாவனையில் ஈடுப்படுவதால் குறித்த பாடசாலைகளின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என அவற்றின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாடசாலை சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இந்த போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற விசேட விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம் என்றார்.

