இலங்கை போக்குவரத்து சபையின் 66 வருட வரலாற்றில் முதல் தடவையாக ‘கொலோம்புர கரிகா’ என்ற புதிய சொகுசு சுற்றுலா பஸ் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ள புதிய பஸ்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த பஸ் சேவையில் முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள 07 சுற்றுலா வலயங்கள் உள்ளடக்கப்படவுள்ளது.
இந்த பஸ்களில் பயிற்சி பெற்ற சாரதிகள், நடத்துனர் மற்றும் ஒரு தனிநபரும் பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு நியமிக்கப்படுவார்கள்.
பஸ் சேவையின் மூலம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சமய மற்றும் கலாச்சார அடையாளங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதை உறுதிப்படுத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



