நல்லதண்ணி பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லதண்ணி பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை சோதனையிட்ட போது குறித்த போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவனொளிபாதமலை யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு வேனில் வந்த சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்த 11 ஆயிரம் ரூபா போலி நாணயத் தாள்களும், ஐநூறு ரூபா போலி நாணயத்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
வேனில் பயணித்தவர்கள் இந்தப் பணத்தை தன்னிடம் கொடுத்ததாகவும், அது போலி ரூபாய் நாணயத்தாள்கள் என்று தனது தெரியாமல் எடுத்துச் சென்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

