கொழும்பிலிருந்து பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் குடஹகபொல உப ரயில்வே கடவையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த கார் ஒன்னற மோதியதில் நால்வர் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது காரில் நான்கு பேர் பயணித்துள்ளதுடன் நால்வரும் காயமடைந்து சீதுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

