நாட்டின் நலனை கருத்தில் கொண்டே துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியதாக கோட்டாபய தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமன்னிப்பை வழங்கியவேளை கோட்டாபய உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை – சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பின்பற்றவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியமை சட்டபூர்வமானதல்ல என தெரிவித்து இன்று வழங்கிய தீர்ப்பின்போதே உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஜனாதிபதி துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பைவழங்கிய வேளை தேசத்தின் நலனை கருத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் அவர் தேசத்தின் எந்த நலனை கருத்தில் எடுத்துள்ளார்?
என்னை பொறுத்தவரை இரண்டுதரப்பினர் இது குறித்து தெளிவுபடுத்தலாம் முதலாவது முன்னாள் ஜனாதிபதியே தேசத்தின் நலன்கள் என்னவென்பதை தெரிவிக்கலாம் ஏன் என்றால் தனதுசத்தியக்கடதாசியில் என்ன தெரிவித்துள்ளார் என்பது அவருக்கே தெரியும்.
இரண்டாவது ஜனாதிபதியின் ஆவணம் ஜனாதிபதி தனது பதவியை துறந்த பின்னரும் ஜனாதிபதி செயலகத்திலேயே இருந்திருக்கும்.
சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் எவையும் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு பொதுமன்னிப்பை வழங்குவதற்கான காரணம் அதுதான் என்பதை சுட்டிக்காட்டவில்லை.
அத்தகைய விடயத்தை அடிப்படை காரணமாககூட கண்டறியமுடியாமலுள்ளது எனவே முன்னாள் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை அவராலும் அவரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களாலும் உறுதிப்படுத்தமுடியவில்லை.
தேசத்தின் நலனை கருத்தில் கொண்டே குற்றம்சாட்டப்பட்டவருக்கு பொதுமன்னிப்பை முன்னாள் ஜனாதிபதி வழங்கினார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
குற்றம்சாட்டப்பட்டவருக்கு பொதுமன்னிப்பை வழங்கியவேளை முன்னாள் ஜனாதிபதி உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை.
சட்டமாஅதிபரின் ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.இதன் காரணமாக சட்டம் அவர் எந்த விடயங்களை கருத்தில் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அவர் கருத்தில் கொள்ளவில்லை.
இதனால் முன்னாள் ஜனாதிபதிதனது விருப்புரிமையை சரியாக பயன்படுத்தினார் என தெரிவிக்க முடியாது என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

