வீட்டுப் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்புக் கட்டணத்தை குறைக்க சவூதி தீர்மானம்

159 0

வெளிநாடுகளுக்கு வீட்டு பணியாளர்களாக அமர்த்துவதற்கு விதிக்கப்படும் ஆட்சேர்ப்பு கட்டணத்தை குறைக்க சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது.

பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா,  கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில்  இந்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .

இந்த  நாட்டு மக்களை வீட்டுப் பணியாளர்களாக வேலைக்கு அமர்த்துவதில் ஏற்படும் அதிக செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பிலிப்பைன்ஸுக்கு 15,900 முதல் 14,700 சவூதி ரியால்கள்,  இலங்கைக்கு 15,000 முதல் 13,800 சவூதி ரியால்கள், பங்களாதேஷுக்கு 13,000 முதல் 11,750 சவூதி ரியால்கள், கென்யாவுக்கு 10,870 முதல் 9,000 சவூதி ரியால்கள், உகண்டாவுக்கு 10,870  முதல் 9,000 சவூதி ரியால்கள், எத்தியோப்பியாவுக்கு 9,500 முதல் 8,300 சவூதி ரியால்கள், அறிவிடப்படவுள்ளன. இதேவேளை, குறைந்த ஆட்சேர்ப்பு கட்டணமாக 6,900 லிருந்து 5,900 சவூதி ரியால்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.