தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மரணம்

148 0

தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொலன்னறுவை – கிரிதலை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடையவராவார்.

இவர் தனது சகோதரனின் மகனுக்கு எச்சரிக்கை விடுத்ததன் தொடர்பாக இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

25 வயதுடைய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.