பேஸ்புக்கில் வெள்ளைக்கொடியை பதிவேற்றி விட்டு பொறியியலாளர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

155 0

அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ, கோமரன்கல்ல பிரதேசத்தில் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 37 வயதுடைய பொறியியலாளராவார்.

குறித்த நபர் தனது உயிரை மாய்ப்பதற்கு முன்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெள்ளைக் கொடி ஒன்றின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவை பார்வையிட்ட அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சந்தேகத்தில் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள அறையொன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொறியியலாளர் உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.