சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளான இலங்கையர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்!

142 0

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளான ரசிந்த லியனாராச்சி இன்று செவ்வாய்க்கிழமை  (16) காலை  நாட்டுக்கு  அழைத்து வரப்பட்டார்.

இன்றைய தினம் காலை 6.10 மணியளவில் சவூதி அரேபியாவின் ரியாத்திலிருந்து  விமானம் மூலம் அவர்  நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

அம்பியூலன்ஸ் ஒன்று விமானத்துக்கு  அருகில் சென்று அவரை  ஏற்றிச் சென்றதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டில், அவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அவரது  பணியிடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அங்குள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.