பொங்கல் விழாவையொட்டி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் தி.மு.க. தொண்டர்களை சந்தித்தார்.தேவகவுடா பிரதமர் ஆவதற்கு முன்பும், பிரதமராக இருந்தபோதும் மட்டுமின்றி, இப்போதும் கூட தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட காவிரியிலிருந்து தரக்கூடாது என்பதில் வைராக்கியமாக உள்ளார்.அவரிடமிருந்து தமிழகத்துக்கு சாதகமான வார்த்தைகள் வராது. இவர் தீர்ப்பாயம் அமைப்பதை எதிர்த்தார்.அரசிதழில் வெளியிடுவதை எதிர்த்தார். அவர் காலம் முழுவதும் தமிழகத்துக்கு எதிராகத்தான் பேசுவார்.மோடிக்கு சாதகமாக பேசினால்தான் அவருடைய பிள்ளைகளால் அரசியல் நடத்த முடியும் என்று நினைக்கிறார்.
அதை பற்றி எல்லாம் நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.தேவகவுடா ஆதாயத்துக்காக பேசுகிறாரோ அல்லது வெறுப்பாக பேசுகிறாரோ, எப்படி இருந்தாலும் தமிழகத்துக்கு எதிர்ப்பாகத்தான் பேசுவார்.அண்ணாமலை அடுத்த ஊழல் பட்டியலை வெளியிடட்டும். நாங்கள் என்ன, அவர் கையையா பிடித்துள்ளோம். நாளைக்கே தேர்தல் வந்தாலும் தி.மு.க. சந்திக்கும்.இது கொள்கைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.
தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியை அறிவிப்போம். இப்போதைக்கு கூட்டணி பற்றி சொல்ல முடியாது. இப்போதுள்ள தோழமைக் கட்சிகள் எங்களுடன் இருப்பார்கள் என பலமாக நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, “தமிழகத்தில் அதிகார மையங்கள் அதிகமாகிவிட்டது என பழனிசாமி கூறியுள்ளாரே ” என கேட்டதற்கு, “அவர் எதிர்க்கட்சி, அப்படித்தான் கூறுவார்.என துரைமுருகன் பதிலளித்தார்.

