கொழும்பு மட்டக்குளி துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

247 0

கொழும்பு மட்டக்குளி ரந்திய உயன தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம்  நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 40 வயதுடைய  நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.