சுகாதார நிபுணர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தீர்மானம் !

50 0

சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை (16) காலை 6.30 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.

வைத்தியர்களுக்கு அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டுமென சுகாதார நிபுணர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இப்போராட்டத்தில் மருத்துவ ஆய்வுக்கூட நிபுணர்கள், கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள், மருந்தாளுநர்கள், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளர் காவு வண்டி ஊழியர்கள் உள்ளிட்ட 75 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுகாதார நிபுணர் சங்ககங்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க இராணுவத்தினரைப்  பயன்படுத்தினால், தொழிற்சங்கப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்போம் என சுகாதார நிபுணர்கள் அக்கடமியில் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.