தமிழ்மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்- 2024-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

130 0

பரிதியொளி பரவிடுமே

தைப்பொங்கல் திருநாளில்
தரணியெல்லாம் செழித்திடுமே!
வையத்தின் மேனியெங்கும்
பரிதியொளி பரவிடுமே!
உளம் பொங்கும் உழவர்களின்
நன்றியொளி வீசிடுமே!
காளமேட்டில் பொங்கல்ப் பானை
பொங்கியே மலர்திடுமே!

உளம் ஆளும் தமிழ் ஈழம்
பேரெழிலாய்த் தோன்றிடுமே!
களம் ஆழ்ந்தோர் நடுகல்லில்
காவியங்கள் மலர்ந்திடுமே!
தமிழீழத் தலைவனவன்
விழிபூத்து மகிழ்ந்திடுமே!
தமிழீழம் தோன்றிடவே
புதுவெள்ளி பூத்திடுமே!