வங்கதேச நாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள நோயாளிகள் மூன்று பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் ஏர் இந்தியா நிறுவனம் இலவச டிக்கெட் வழங்கியது.
வங்கதேச நாட்டில் மெகெர்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த பழ வியாபாரி டோபஸல் ஹூசைன். இவர் தனது இரண்டு மகன்கள் அப்தஸ்(24), ராஹினுல்(14) மற்றும் ஒரு பேரனை(ஷோரப்(8)) கருணைக் கொலை தன் நாட்டு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
வித்தியாசமான நோயாள் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால் இந்த கோரிக்கையை அவர் முன் வைத்தார். டக்சென்னி தசைநார் தேய்வு என்ற இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 30 வயதிற்கு மேல் வாழ்வது மிகவும் அரிதான விஷயமாகும்.
இதனையடுத்து, இதுபோன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உதவ முன் வந்தது. அதற்கு வங்கதேசத்தில் இருந்து கொல்கத்தா வந்து சேர்ந்தனர். இருப்பினும் அவர்களுக்கு கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லும் பயணச் செலவு மிகவும் சிக்கலாக இருந்தது.
இதனையடுத்து, மருத்துவர்கள் ஒருவர் மூலமாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனமும் உதவ முன் வந்தது.
3 நோயாளிகள் அவர்களுடன் பயணம் செல்ல மூன்று பேரும் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் நேற்று மாலை சென்றனர். சிகிச்சை முடிந்தது மீண்டும் திரும்பி செல்வதற்கும் இலவசமாக டிக்கெட் கொடுக்க ஏர் இந்தியா உறுதி அளித்துள்ளது.

