லசந்தவையும் வாசிம்தாஜூடீனையும் கொலை செய்தது யார் என்பது எனக்கு தெரியும்- மேர்வின்

66 0
image
லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீனை கொலை செய்தவர்கள் யார் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இருவரும் கொலை செய்யப்பட்டவேளை ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய மேர்வின் சில்வா உரிய நேரத்தில் இந்த கொலைகளிற்கு யார் காரணம் என்பதை அம்பலப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

சிரச தொலைக்காட்சி மீதான தாக்குதலிற்கு யார் காரணம் என்பதும் தனக்கு தெரியும் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த லசந்த விக்கிரமதுங்க கொல்லப்படும்போது அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்ற வழக்கை முன்னெடுத்திருந்தார்.

வாசிம் தாஜூடீன் கார்விபத்தில் உயிரிழந்தார் என முதலில் அறிவிக்கப்பட்டது பின்னர் விசாரணைகளின் போது அது கொலை என்பது தெரியவந்தது.