யாழில் மகளின் உயிரை காப்பாற்ற தாய் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

172 0

யாழில் தனது மகளின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவுமாறு தாயொருவர் உருக்கமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா டிலக்சனா என்ற யுவதி கடந்த 8 வருடங்களாக சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவருக்கு 19 வயதில் இந்த நோய் ஆரம்பித்துள்ளது. தற்போது இவரது வயது 27. இவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வாரத்தில் மூன்று தடவைகள் சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. சுத்திகரிப்பு சிகிச்சைக்கு செல்வதற்கு ஒரு நாளுக்கு மூவாயிரம் ரூபா செலவாகுவதாகவும், ஒரு மாதத்திற்கு 36 ஆயிரம் ரூபா செலவாகுவதாகவும் அவரது தாயார் தெரிவிக்கின்றார்.

அத்துடன், கடன் பெற்றே இந்த சிகிச்சையை மேற்கொள்வதாக அவர் கூறுவதோடு குறித்த யுவதிக்கு மிக விரைவில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தனது மகளின் சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உதவுமாறு குறித்த தாயார் உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ரத்தினராசா திலக்சனா

வர்த்தக வங்கி (Commercial bank) – 8239005448

சங்கானைக் கிளை (Chankanai branch)

தொலைபேசி இலக்கம் – +94767063064