சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து போதையொழிப்புக்கான யுக்திய நடவடிக்கையை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஐக்கிய நடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டிர்க் மற்றும் உள்நாட்டு சிவில், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் போதையொழிப்பு தொடர்பில் முன்னெடுத்து வரும் யுக்திய நடவடிக்கையில் பாதுகாப்புத் தரப்பினர் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் எதேச்சதிகாரமாக செயற்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டி குறித்த நடவடிக்கைளில் பாதுகாப்புத் தரப்பினரை ஈடுபடுத்துவது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறித்து வினவியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் விநியோகத்தினை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கத்தில் குறித்த செயற்றிட்டமானது கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் கணிசமான அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் பங்கேற்பவர்கள், விற்பனைகளில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்டவர்களின் சொத்துக்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்விதமான நடவடிக்கை தொடரும் பட்சத்தில் குறுகிய காலத்தில் போதைப்பொருட்களை ஒழித்த நாடாக இலங்கை உருவெடுக்கும் என்பதில் எனக்கு தீவிரமான நம்பிக்கை உள்ளது.
நாட்டின் பொருளதார மேம்பாட்டுக்கு போதையொழிப்பு முக்கிய விடயமாக இருக்கின்றது.
ஆகவே இந்தச் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
மனித உரிமைகள் உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் உள்நாட்டிலோ, சர்வதேசத்திலோ என்மீது அழுத்தங்கள் பிரயோகிப்பதற்கு முனைந்தால் அதற்கு அடிபணியப்போவதில்லை.
முன்னதாகவே, நாட்டில் உள்ள இராஜதந்திரிகள் என்னுடன் இந்த விடயங்கள் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். அவர்கள் இந்த கடுமையான நடவடிக்கையை தளர்த்துமாறு கோரினார்கள்.
ஆனால் போதைப்பொருளால் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதுள்ள பாரிய ஆபத்துக்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். என்மீது அழுத்தங்கள் பிரயோகிப்பதற்கு முனைந்தால் அதற்கு அடிபணியப்போவதில்லை.
முன்னதாகவே, நாட்டில் உள்ள இராஜதந்திரிகள் என்னுடன் இந்த விடயங்கள் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். அவர்கள் இந்த கடுமையான நடவடிக்கையை தளர்த்துமாறு கோரினார்கள்.
ஆனால் போதைப்பொருளால் எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதிலுள்ள பாரிய ஆபத்துக்களை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஆகவே, நான் தற்போதுள்ள பதவியில் நீடிக்கும் வரையில் நிச்சயமாக போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன்.
போதைப்பொருளற்ற நாட்டை மீளமைப்பதற்காக எனது அர்ப்பணிப்புக்கள் தொடரும். இந்த முன்னெடுப்பில் அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்கும் அதேநேரம், விமர்சனங்களை கண்டு பின்வாங்கப்போவதில்லை என்றார்.

