மேலும் 897 பேர் கைது

175 0

யுக்திய விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கீழ் இன்று (13) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 897 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 24 பேர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவுக்கு அமைய மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைக்கு அடிமையான 22 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகளின் போது 299 கிராம் ஹெரோயின், 172 கிராம் 40 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 1,233 போதை மாத்திரைகள் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.