மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் ஹெலிக்கொப்டர் ஒன்று சிறிய விபத்து காரணமாக சேதமடைந்துள்ளது.
தொலைதூர பகுதியொன்றில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்குவதற்கான முயற்சிகளின் போது எம்ஐ17 போக்குவரத்து ஹெலிக்கொப்டர்சேதமடைந்துள்ளது
எனினும் ஹெலிக்கொப்டரிலிருந்து இலங்கையை சேர்ந்தவர்கள் எவரும் காயமடையவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்துள்ளசிறிலங்கா விமானப்படை பேச்சாளர் ஹெலிக்கொப்டருக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறித்து முழுமையான விபரங்கள் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

