தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி, இந்து மதத்தைப் பின்பற்றும் கைதிகளைப் பார்வையிடுவதற்கு நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தத் தினத்தில் இந்து மதக் கைதிகளுக்கு தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் ஒருவருக்கு ஏற்றளவு உணவுப் பொதிகள் மற்றும் இனிப்புகளை அவர்களின் உறவினர்கள் வழங்க அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

