செங்கடல் பகுதியில் ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ள தாக்குதல்களிற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க போர்க்கப்பல்கள் குரூஸ் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டன அமெரிக்க விமானங்கள் 12 இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டன என தகவல்கள் வெளியாகின்றன.
யேமனின் தலைநகர் சனா ஹெளத்திகளின் கோட்டையான செங்கடல் நகரம் குடாய்டா ஆகியவற்றின் மீதே தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
சைப்பிரசில் உள்ள தளத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டனின் போர் விமானங்களும் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
அவுஸ்திரேலியா கனடா பஹ்ரைன் நெதர்லாந்து உட்பட பல நாடுகள் ஆதரவை வழங்கியுள்ளன.

