இவ்வாறு வீசப்பட்டபொதியானது சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டுள்ளது.
குறித்த பொதியிலிருந்து ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா, 8 புகையிலைகள் மற்றும் 4 லைட்டர் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பொதியானது சிறைச்சாலை தலைமை அதிகாரியிடம் கையளிக்கப்பட்டதையடுத்து மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

