யால பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது

180 0

கடும் மழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் யால பூங்காவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

திஸ்ஸமஹாராம பலதுபன யாலயின் பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்தார்.

எனினும் கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா பயணிகள் யால பூங்காவிற்குள் பிரவேசிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடும் மழை காரணமாக மெனிக் கங்கை நிரம்பி வழிவதால் 6 சுற்றுலா வீடுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் மேலும் தெரிவித்தார்.