சமிந்த விஜேசிறியின் இடத்துக்கு நயன வாசலதிலக!

131 0
நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதவி விலகியதனையடுத்து வெற்றிடமாகவுள்ள  இடத்துக்கு நயன வாசலதிலக நியமிக்கப்படவுள்ளார்.

இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியை  பிரதிநிதித்துவப்படுத்தி 31,307 வாக்குகளைப் பெற்றார்.

சமிந்த விஜேசிறி இன்று (09) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.