யுக்திய நடவடிக்கை காரணமாக பூசாரியாக வேடமணிந்து தலைமறைவாகி இருந்த “ஷோடா” என்பவர் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் யுக்திய நடவடிக்கை காரணமாக தெஹிவளை மற்றும் ரத்மலானை ஆகிய பிரதேசங்கில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் ஹொரண பிரதேசத்தில் 1000 ரூபாவிற்கு சோதிடம் பார்க்கும் பூசாரியாக வேடமணிந்து வந்துள்ளார்.
இது தொடர்பில் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடத்தில் இருந்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

