இலங்கைக்கும் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகளிற்கும் இடையில் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தாகவேண்டும் என ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் கடன்வழங்கிய நாடுகளிற்கும்இடையில் விரைவில் புரிந்துணர்வுஉடன்படிக்கை கைச்சாத்திடப்படவேண்டியதன் அவசியத்தை ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
உத்தியோகபூர்வ கடனாளர் குழுவிற்கு வெளியே உள்ள கடன்வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களுடன் வெளிப்படைதன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மையை உறுதிப்படுத்தவேண்டிய அவசியத்தையும்ஜப்பான்வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கு கடன்வழங்கிய 15 நாடுகள் குழுவிற்கு ஜப்பான் இந்தியா பிரான்சுடன் தலைமை தாங்குவது குறிப்பிடத்தக்கது.
1948 ன் பின்னர் மிகமோசமான நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை மிகவும்அதிகரித்த பணவீக்கம் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி போன்றன காரணமாக இலங்கையின் பொருளாதாராம் பெரும்வீழ்ச்சியை எதிர்கொண்டதுடன் 2022இல் வெளிநாட்டுகடன்களை திருப்பி செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்தது.
கடந்த மாதம் நவம்பரில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள்கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்தன.
இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா இலங்கையுடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது எனினும் கடன்வழங்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ குழுவில் இடம்பெறவில்லை.

