போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த படோவிட்ட அசங்கவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயின், கேரளா கஞ்சா மற்றும் பல ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து நேற்று (06) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, சந்தேகநபரிடம் இருந்து 06 கிராம் ஹெரோயின், 10 கிராம் கேரள கஞ்சா, 467,000 ரூபா பணம், 05 வாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

