காலி சிறைச்சாலையில் தற்போது 07 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காலி சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
05 கைதிகள் காய்ச்சல் காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (06) மேலும் இரு கைதிகள் காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காலி சிறைச்சாலையில் பார்வையாளர்களைப் பார்ப்பது மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும், புதிய கைதிகளை அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பவும் சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

