யாழ். வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு

40 0

சமீப காலமாக யாழ். வடமராட்சி – கிழக்கில் தொடர்ச்சியாக சந்தேகத்துக்கிடமான பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன.

அந்தவகையில், இன்று (06.01.2024) அதிகாலையில் யாழ். வத்திராயன் கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகில் காணப்படும்  கடற்றொழில்  திணைக்களத்தின் பதிவு இலக்கம் அழிக்கப்பட்டுள்ளதால் அந்த படகை போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பாவித்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மற்றும் கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவளை, வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் பௌத்த கொடியுடன் மிதப்பு ஒன்றும் நாகர்கோவில் பகுதியில் மரத்தினாலான மிதப்பு மற்றும் மூடிய கொள்கலன் ஒன்றும் கரை ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.