வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம் : பாதுகாப்பு தீவிரம் : சில வீதிகளும் முடக்கம்

171 0
image

வடக்கிற்கு 4 நாள் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (05) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாநகரசபை கலாசார மண்டபத்தில் காலை  நடைபெறவுள்ள அபிவிருத்து தொடர்பிலான கூட்டத்தில்  ஜனாதிபதி  கலந்து கொள்ளவுள்ளார்.

அதனையடுத்து மாநகரசபையினை சூழவுள்ள இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாநகரசபை கலாசார மண்டபத்தினை அண்மித்துள்ள நூலக வீதி , நகரசபை வீதி என்பன முடக்கப்பட்டுள்ளன.