லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் எம்முடன் சிலர் இணைவர்

136 0

ஐக்கிய மக்கள் சக்தியின் மதிப்பீட்டின் படி எதிர்வரும் ஏப்ரல் அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பொதுத் தேர்தல் இடம்பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இவ்வாண்டில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் ரணில் ராஜபக்ஷ அரசாங்கம் வலுவடைவதோடு, வாழ்க்கை சுமைகள் மேலும் அதிகரிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

எம்முடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்த பலரை நாம் நிராகரித்துள்ளோம். இவ்வாறு ஆழமாக சிந்தித்து தூய்மையானவர்களே ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

யார் எம்முடன் இணைந்தாலும் அவர்கள் எமது கொள்கைகளுக்கு அமையவே செயற்பட வேண்டும். மாறாக எம்மால் அவர்களின் கொள்கைகளை ஏற்க முடியாது.

எதிர்வரும் தினங்களில் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் சிலர் எம்முடன் இணைவர். அதற்காக அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதல்லவா? என்றார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்ததார்.