மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு

115 0
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பேலியகொடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தராவார்.

இவர் செலுத்திய மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இவர் காயமடைந்த நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்அகாண்டு வருகின்றனர்.