யாழ்ப்பணம் – கோப்பாய் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் இன்று(03.01.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 15 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

