அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரியின் நினைவேந்தல் நிகழ்வில் ஈரானில் குண்டுவெடிப்பு- 103 பேர் பலி

130 0
image
ஈரானில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில்103 பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.

நான்கு வருடங்களிற்கு முன்னர் ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இராணுவ அதிகாரி கசேம்சொலைமானியின் நினைவேந்தல் நிகழ்வில்  இரண்டு குண்டுகள் வெடித்ததில்103 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

171 பேர் காயமடைந்துள்ளனர் என ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

கெர்மான் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பத்துநிமிட இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்துள்ள அதேவேளை நான்கு குண்டுகள் வெடித்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன

வெளியாகும் தகவல்கள் மிகவும் திறமையான முறையில் திட்டமிடப்பட்டு இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டதை வெளிப்படுத்துகின்றன.

சுலைமானியின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து 700 மீற்றர் தூரத்தில் முதலாவது குண்டு வெடித்தது இரண்டாவது குண்டு 1 கிலோமீற்றர்  தூரத்தில் வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளளன.

இதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளதாக  அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இரண்டு குண்டுகள் தொலைவிலிருந்து வெடிக்கவைக்கப்பட்டன என தெரிவித்துள்ள அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டுள்ளனர்.