மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரவேண்டாம் எனக் கூறிய சகோதரி மீது கத்திக்குத்து ; சகோதரன் கைது

123 0

மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரவேண்டாம் என கூறிய சகோதரியை மரக்கறி வெட்டும் கத்தியால் குத்தி காயப்படுத்திய சகோதரன் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவராவார்.

இவர் மற்றுமொரு சகோதரனுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு மது போதையில் காயமடைந்த சகோதரியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரவேண்டாம் என சகோதரி கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தேக நபர் சமையல் அறையிலிருந்த மரக்கறி வெட்டும் கத்தியால் சகோதரியின் முதுகில் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்தவர் தர்கா நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.