சுகயீன விடுமுறையுடன் போராட்டத்தில் ஈடுபடுவோம்

127 0

மின்சார சபையின் சகல ஊழியர்களின் விடுமுறைகளையும் செவ்வாய்க்கிழமை (03) முதல் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்து மின்சார சபை விசேட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கும் வரை விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சுகயீன விடுமுறைக்கு அமைய போராட்டத்தில் ஈடுபடுவோம் என மின்சார சேவை ஊழியர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சேவை சங்கத்தினர் நாளை (4) முதல் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தனர்.

மின்சார சபையை மறுசீரமைக்கும் வகையில் வரத்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தின் மொழிபெயர்ப்பில் பல குறைபாடுகள் காணப்படுவதால் மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. திருத்தங்களுடன் சட்டமூலத்தை  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் தான் மின்சார சேவை சங்கத்தினர் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.