ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை

146 0
ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவையை ரோசியா ஏர்லைன்ஸ் ஜனவரி முதலாம் திகதி அன்று அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நான்காவது விமான சேவையாக இந்த விமான சேவை திகழ்கிறது.

இந்த ரோசியா ஏயார்லைன்ஸ் விமான சேவையானது ரஷ்யாவின் மாஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்கவிற்கும் இடையே நேர அட்டவணை படி வாரத்தின் 4 நாட்கள் சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே அரோஃப்ளோட் ( Aroflot ) , அஸூர் ஏர்  (Azur Air ) , ரெட் விங்ஸ்  ( Red Wings ) மற்றும் ரோசியா ஏர்லைன்ஸ் ( Rossiya Air Line ) ஆகிய விமான சேவைகள் இயங்கி வருகின்றன.