யானை தாக்கி மீன் வியாபாரி படுகாயம்

122 0

யானை தாக்கியதில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை (03) காலை 7 மணியளவில் வாகனேரி பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி – மீராவோடை நூராணியா வீதியைச் சேர்ந்த 52 வயதுடைய மீன் வியாபாரி வியாபாரத்துக்கு செல்லும் போதே இவ்வாறு யானை தாக்கி படுகாயமடைந்துள்ளார்.

யானை தாக்குதலுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.