இரசாயன உரத்திற்கு வற் வரி

170 0

இரசாயன உரத்திற்கு பெறுமதி சேர் வரியை விதிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் போகத்தில் இருந்து அதனை நடைமுறைப்படுத்த தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப் பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அது தொடர்பில் சாதகமான முறையில் பதிலளித்துள்ளார் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.