பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது எதிர்ப்பை வௌிப்படுத்திய மக்கள்!

131 0

தம்புத்தேகம, கொன்வெவ பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்புக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் நீர் சுத்திகரிப்பு வேலை திட்டம் ஒன்றின் பணிக்காக குறித்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

எனினும், அங்கு வந்த மக்கள் எஸ்.எம். சந்திரசேன மற்றும் எஸ்.எம். ரஞ்சித் உள்ளிட்ட சிலரை கண்டதும் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் இவ்வாறு பதிவு செய்திருந்தார்.