போதைப்பொருளுக்கு அடிமையானவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

125 0

போதைப்பொருளுக்கு அடிமையாகிய நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பாதுக்கை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

இவர் தனது உடலில் பல பகுதிகளில் வெட்டு காயங்களை ஏற்படுத்திக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குறித்த நபர், போதைப்பொருள் கிடைக்கமையால் தற்கொலை செய்திருக்கலாம் என பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.