கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய உபுல் சமிந்த குமாரவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி வெலிகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இந்த சார்ஜன்ட் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் டிசம்பர் 31 முதல் அவருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.