குழந்தைகளிடையே பரவும் பல வகையான சுவாச நோய்கள் : இருவருக்கு கொவிட் -19 தொற்றாம்!

60 0

இந்த நாட்களில்  குழந்தைகளிடையே பல வகையான சுவாச நோய்கள் பரவி வருவதாக குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா கூறுகிறார்.

பரிசோதிக்கப்பட்ட குழந்தைகளில், பெரும்பாலானவர்களுக்கு இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் இருப்பதுடன்  இரண்டு கொவிட் -19 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு மேல் சுவாசக் குழாயில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக வைரஸ் காய்ச்சல்கள். இருமல், சளி, வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் உள்ளதனை அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.