அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்

147 0
தரம்குறைந்த இம்யுனோகுளோபலின் விவகாரத்தில் தொடர்புபட்ட நிறுவனத்தின் உரிமையாளரான பிரதான சந்தேகநபரின் சட்டத்தரணி தனது கட்சிக்காரர் முன்னாள் சுகாதார அமைச்சரின் உத்தரவை பின்பற்றினார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார் நான் செய்தேன் என தனது கட்சிக்காரர் தெரிவித்தார் என சட்டத்தரணிகுறிப்பிட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் சட்டத்தரணி ஜாலியசமரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

ஒரு மில்லியன் ரூபாய் பொதுபணத்தில் இடம்பெற்ற இந்த மோசடி குறித்து முன்னாள் சுகாதார அமைச்சருக்கு தெரிந்திருந்ததா என சிஐடியினரிடம் நீதவான் வினவினார்.

தரம்குறைந்த இம்யுனோகுளோபலின் கொள்வனவை முன்னெடுக்குமாறு முன்னாள் அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெலவே உத்தரவிட்டார் என இரண்டு சந்தேகநபர்கள்தெரிவித்துள்ளதாக அவர்களின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர் எனினும் சிஐடியினர்  முன்னாள் சுகாதார அமைச்சரின் பெயரை சந்தேக நபர்களின் அறிக்கைகளில்  குறிப்பிடவில்லைஎன நீதவான்சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் முதலாவது மூன்றாவது சந்தேகநபர்களிடம் மேலும் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.